Home இந்தியாஇதற்கு மேல் எதையும் செய்ய முடியாது – ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த லண்டன் வைத்தியர் : பிள்ளைகளை நேரத்துடன் கூட்டிச் செல்லுமாறு பாடசாலை நிர்வாகங்கள் அறிவிப்பு

இதற்கு மேல் எதையும் செய்ய முடியாது – ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த லண்டன் வைத்தியர் : பிள்ளைகளை நேரத்துடன் கூட்டிச் செல்லுமாறு பாடசாலை நிர்வாகங்கள் அறிவிப்பு

by admin

தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த லண்டனை சேர்ந்த மருத்துவர் ரிச்சர்ட் பீலே, வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னால் இதற்கு மேல் எதையும் செய்ய முடியாது என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரிச்சர்ட் பீலே இன்று வெளியிட்ட அறிக்கையில், அப்பல்லோ மருத்துவமனையில் உலக தரம்மிக்க உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் உள்ளன என்றும், எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்டோரும் சிறப்பான சிகிச்சையை அளித்தாகவும், ஆனால் நிலைமை கைமீறிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ்நாட்டின் பாடசாலைகளின் நிர்வாகங்கள் பெற்றோர்களை அழைத்து, பிள்ளைகளை நேரத்துடன் கூட்டிச் செல்லுமாறு பிற்பகலில்  அறிவித்துள்ளதாகவும்  இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் பரபரப்புடன் பாடசாலைகளுக்குச் ; சென்று பிள்ளைகளை அழைத்துச் செல்வமதாகவும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ மாணவிகளும் பிற்பகலிலேயே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More