165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சபாநாயகர் கரு ஜயசூரியவின் நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அதிருப்தி வெளியிட்டுள்ளார். சபாநாயகர் பாராளுமன்றின் அதிகாரத்தை காவல்துறையினருக்கு காட்டிக் கொடுத்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
பொரளையில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையினால் நாட்டின் ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சட்டம் என்ற போர்வையில் ஜனநாயக விரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த செயற்பாடுகளுக்கு சபாநாயகரும் துணை நிற்பதாக தெரிவித்துள்ளார்.
Spread the love