குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளது. தயா மாஸ்டருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக புலனாய்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அப்பாவி பொதுமக்களை பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்தார் என தயா மாஸ்டர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் சட்ட மா அதிபர் வவுனியா நீதிமன்றில் தயா மாஸ்டருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். தயா மாஸ்டரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டரும் 2009ம் ஆண்டில் அரச படையினரிடம் சரணடைந்திருந்தனர்.