162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாகிஸ்தான் அணியின் சுழற் பந்து வீச்சாளர் யாசீர் ஷா உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். யாசீர் ஷாவிற்கு பயிற்சியின் போது முதுகு பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் அணி தற்போது அவுஸ்திரேலியாவிற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த வார இறுதியில் கெய்ன்ஸில் நடைபெறவுள்ள பயிற்சி ஆட்டத்தில் ஷா பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டித் தொடரின் முக்கிய வீரராக ஷா கருதப்படுகின்றார்.
Spread the love