Home இலங்கையாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமைக்கு ரணில் மன்னிப்பு கோரினார்

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமைக்கு ரணில் மன்னிப்பு கோரினார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மன்னிப்பு கோரியுள்ளார்.1981ம் ஆண்டில் யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டமைக்காக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்காக மன்னிப்பு கோருமாறு கூட்டு எதிர்க்கட்சியினரிடமும் அவர் கோரியுள்ளார். 1981ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த போது யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதாகவும் இது பிழையானது எனவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.

உங்களது அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளுக்காக நீங்களும் மன்னிப்பு கோர வேண்டுமென பிரதமர் கூட்டு எதிர்க்கட்சியினரைப் பார்த்து தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் இந்த பகிரங்க மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More