குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மறைந்த தமிழக முதல்வர் மற்றும் கியூவாவின் முன்னாள் ஜனாதிபதி ஆகியிருக்கு வடமாகாண சபையில் மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
அஞ்சலி நிகழ்வின் போது மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா மற்றும் கியூவா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிடல் கஸ்ரோ ஆகியோரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு படங்களுக்கு உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதேவேளை இன்றைய தினம் வடமாகாண சபையின் 67 ஆவது அமர்வில் கலந்து கொண்ட ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு நிற சால்வை அணிந்திருந்தார்.
Spread the love
Add Comment