முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் குமார் குணரட்னத்திற்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் உரிய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்னம் இதற்கு முன்னதாக குடியுரிமை பெற்றுக் கொள்ள இரண்டு தடவைகள் விண்ணப்பங்கள் சமர்ப்பித்த போது அவை நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீசா காலம் பூர்த்தியாகி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்ததாகக் குற்றம் சுமத்தி தண்டனை விதிக்கப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.