லங்கா சமசமாஜக் கட்சியின் அரசியல் சபை பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அக்கட்சியின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் சங்கைக்குரிய பத்தேகம சமித தேரர், லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.