குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த செம்ரெம்பா் மாதம் தீயினால் எரிந்து அழிந்துபோன கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு இன்னும் இரணடு வாரங்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என வட மாகாண ஆளுநா் றெிஜனோல்ட் குரே தெரிவித்துள்ளாா். இன்று 09-12-2016 கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அவா் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் பொதுச் சந்தை வா்த்தகா்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.
அங்கு அவா் மேலும் தெரிவிக்கையில்
கிளிநொச்சி பொதுச் சந்தை தீயினால் எரிந்த விடயம் தொடா்பில் பிரதமா், நிதி அமைச்சா் ,மீள்குடியேற்ற அமைச்சா் சுவாமிநாதன், அமைச்சா் பைசா் முஸ்தபா ஆகியோருடன் பேசியதற்கு அமைவாக அவா்கள் எடுத்துக்கொண்ட நடவடிக்கையின் காரணமாக அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு தற்போது அதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்னும் இரண்டு வாரத்திற்குள் எரிந்து கடைகளுக்க நட்டஈடு வழங்குவதற்கும்ஈ தொடா்ச்சியாக தீயணைப்பு பிாிவை ஏற்படுத்துவதற்கும் ஏற்பாடுகள் பூா்த்தியாகியுள்ளன. அத்தோடு நிரந்தர கட்டடம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே வியாபாரிகள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. நாங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிப்பெற்றுள்ளது. எனத்தெரிவித்தாா்.