நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள உள்ள சந்தைப் பகுதியில் நேற்றைய தினம் இரு பாடசாலை மாணவிகள் தமது உடல்களில் கட்டி வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 56 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 56 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்க்பபட்டுள்ள பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு போகோ ஹரம் தீவிரவாதிகள் காரணம் என காவல்துறையினர் தெரிவித்த போதும் இந்த இயக்கம் இதுதொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை.
கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சமஅளவில் வாழ்ந்து வரும் நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டுமென தெரிவித்து போகோஹரம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.