Home உலகம் நைஜீரியாவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

by admin

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள  உள்ள சந்தைப் பகுதியில் நேற்றைய தினம் இரு  பாடசாலை  மாணவிகள்  தமது உடல்களில் கட்டி வைத்திருந்த  குண்டுகளை வெடிக்கச் செய்ததில்  56 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன்  சுமார் 56 பேர் காயம் அடைந்துள்ளதாகவும்  உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்க்பபட்டுள்ள பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதனால்   உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு போகோ ஹரம் தீவிரவாதிகள் காரணம் என   காவல்துறையினர் தெரிவித்த போதும் இந்த இயக்கம் இதுதொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை.

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சமஅளவில் வாழ்ந்து வரும் நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டுமென தெரிவித்து போகோஹரம் அமைப்பினர்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More