இலங்கையின் சமாதான முனைப்புக்கள் கொலம்பியாவிற்கு பொருத்தமுடையதல்ல என அந்நாட்டு ஜனாதிபதி Juan Manuel Santos தெரிவித்துள்ளார்.
அண்மையி;ல் பார்க் கெரில்லா போராளிகளுடன் சமாதான உடன்படிக்கை ஒன்றில் கொலம்பிய ஜனாதபிதி கைச்சாத்திட்டிருந்தார்.
இந்த ஆண்டுக்கான நோபள் சமாதான விருதும் கொலம்பிய ஜனாதிபதிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் சமாதானப் பொறிமுறைமை குறித்து விரிவாக ஆராயப்பட்ட போதிலும் இந்த முறைமை கொலம்பியாவிற்கு பொருத்தமுடையதாக அமையும் என தாம் கருதவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோபள் சமாதான விருதினை பெற்றுக் கொள்வதற்காக நோர்வே சென்றுள்ள நிலையில் கொலம்பிய ஜனாதிபதியிடம், நோர்வே ஊடகவியலாளர் என்.சேது எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சமாதான முனைப்பு வழிகளை பின்பற்றவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.