குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ராம்ப் வெற்றியீட்டுவதற்கு ரஸ்யா உதவியாக அமெரிக்க உளவுப் பிரிவான சீ.ஐ.ஏ தெரிவித்துள்ளது. ட்ராம்ப் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு ரஸ்ய அரச அதிகாரிகள் முனைப்புடன் செயற்பட்டுள்ளதாக சீ.ஐ.ஏ.யின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சைபர் தாக்குதல்களை நடத்தி மின்னஞ்சல்களை ஊடறுத்து ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலரி கிளின்ரனை தோற்கடிக்கச் செய்ய ரஸ்யா முயற்சித்துள்ளதாகவும் இவ்வாறு உதவிய ரஸ்ய அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது இடம்பெற்ற சைபர் தாக்குதல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பரக் ஒபாமா புலானாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.