நைஜீரியாவின் தென்பகுதியில் உள்ள அக்வா இபோம் என்ற மாநிலம் உள்ள பிரபலமான கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தேவாலயத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதற்காக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்றையதினம் பட்டம் வழங்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்ற நிலையில் தேவாலயத்தின் மேற்கூரையை தாங்கிப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சரிந்து விழுந்ததுடன் சரியாக காயாமல் இருந்த மேற்கூரை முழுவதும் கூடியிருந்த மக்களின்மீது விழுந்துள்ளது.
சும்பவ இடத்துக்கு வந்த மீட்புப் பணியினர் இடிபாடுகளில் சிக்கிய பலரை மீட்டு, வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்தனர். மீட்புப்பணிகள் நிறைவடையாத நிலையில் இதுவரை 60 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.