குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் சில முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்சம் இரண்டு புதிய அமைச்சர்கள் உள்வாங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.. குறைந்த பட்சம் நான்கு அமைச்சர்கள் தங்களது பதவிகளில் மாற்றம் செய்ய உள்ளதாகவும் சிலர் தங்களது அமைச்சுக்களில் மாற்றம் செய்யுமாறு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை வலுப்பெற்று வரும் சூழ்நிலையில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்க முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் ஒருவரை மாறி ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.