Home இந்தியாஇந்திய புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம்

இந்திய புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம்

by admin


இந்திய புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்திய ராணுவ தளபதியாக இருந்து வந்த தல்பீர் சிங் சுஹாக், நேற்று சனிக்கிழமை தனது  பணி நிறைவு செய்ததனைத் தொடர்ந்து  புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டார்.

இந்திய ராணுவத்தின் 27-வது தளபதியாக பிபின் ராவத், டெல்லி தெற்கு பிளாக்கில் உள்ள அலுவலகத்தில் முறைப்படி நேற்று பதவி ஏற்றார். அவரிடம் பணி நிறைவு செய்த தல்பீர் சிங் சுஹாக் கோலினை வழங்கி, பொறுப்பை ஒப்படைத்தார்.

13 லட்சம் வீரர்களை கொண்ட இந்திய ராணுவத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்றுள்ள பிபின் ராவத் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More