குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசிய இனப்பிரச்சினைக்கு இந்த ஆண்டில் தீர்வுத் திட்டமொன்று எட்டப்படும் என தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 2017ம் ஆண்டு மிகவும் முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நிலையானதும், நிரந்தரமானதுமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள அவர் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக தீர்வுத் திட்டமொன்றை முன்னெடுக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டின் அனைத்து மக்களும் பிளவடைய விரும்பக் கூடாது எனவும் ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து தரப்பினரும் இணைந்து வாழவும் அனைவருக்கும் சமஉரிமைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து சுபீட்சமானதும், அமைதியானதுமான நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பொன்னான சந்தர்ப்பத்தை கை நழுவ விடக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.