இந்தியாவில் தேர்தல்களின் போது சாதி, மதம், மொழி, இனம், போன்ற சமூகத்தின் பெயரால் வாக்குகள் கோருவது ஊழல் நடவடிக்கை என கருதப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேர்தலின்போது சாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிப்பது தொடர்பாக கடந்த 1995-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி செய்யப்பட்ட மனு இன்றையதினம் விசாரணைக்கு வந்த வேளையிலேயே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 7 பேர் கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் தேர்தலின்போது சாதி, மதம், மொழி, இனத்தின் பெயரில் வாக்குகள் கோருவதும் ஊழலே என தெரிவித்தமையினை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இனி தேர்தல்களின் போது ஜாதி, மதத்தை பயன்படுத்தி வாக்கு கேட்க கூடாது என உத்தரவிட்டுள்ளது
இந்த உத்தரவு விரைவில் நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது