131
எல்லை நிர்ணய அறிக்கை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். எதிர்வரும் வாரத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எல்லை நிர்ணய அறிக்கை இன்றைய தினம் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தாபவிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் அமைச்சர் இதனை பெற்றுக்கொள்ள நிராகரித்துள்ளார். சில உறுப்பினர்கள் கையயொப்பமிட தவறியுள்ள காரணத்தினால் இந்த அறிக்கையை ஏற்க முடியாது எனவும், இந்த அறிக்கையை பிரதமர் உன்னிப்பாக அவதானிப்பார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்..
Spread the love