156
அறிவுறுத்தல்கள் வழிகாட்டல்களை பின்பற்றுமாறு இராணுவத்தினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஸாந்த டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இராணுவத் தலைமையகத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. உச்ச அளவில் ஒழுக்கம் பேணப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மக்களின் நலனை கருத்திற் கொண்டு படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love