184
நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவா் தற்கொலை செய்துள்ளாா்.
இச் சம்பவம் இன்று 02-01-2016 இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் மூன்றாம் திட்டம் தேராவில் பகுதியைச் சோ்ந்த அம்பிகைபாலன் ஜெகதீஸ்வரி வயது 32 என்பவரே தற்கொலை செய்துள்ளாா்.
தற்கொலை செய்யும் முன் அவா் எழுதியதாக சந்தேகிப்படும் கடிதம் ஒன்றும் காணப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் கணவன் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் அவா் திரும்பி வரவில்லை எனவும் தனது காணியை விற்று தான் பெற்ற கடன்களை செலுத்துமாறும், தனது இறுதி கிரிகைகள் முடிந்ததும் பிள்ளைகளை சிறுவா் விடுதியில் சோ்ததுவிடுமாறும் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
கணவனால் கைவிடப்பட்டுள்ள குறித்த பெண்னுக்கு பன்னிரண்டு, மூன்று வயதில் பெண் பிள்ளைகளும், எட்டு வயதில் ஒரு மகனும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதுகுடியிருப்பு பொலீஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
Spread the love