குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நீதித்துறை தலையீடுகள் அற்று சுதந்திரமாக இயங்க நீதிமன்ற அரச உத்தியோகஸ்தர்கள் சிறப்பான முறையில் கடமையாற்ற வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கோரிக்கை விடுத்துள்ளார். மலர்ந்துள்ள புத்தாண்டின் முதல் கடமை நாளான இன்று நீதிமன்றஅரச உத்தியோகஸ்தர்கள் சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை யாழ். நீதிமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்றது.
அந்நிகழ்வினை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி தேசிய கொடியேற்றி ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து நீதிமன்ற அரச உத்தியோகஸ்தர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர். அதனையடுத்து , மேல் நீதிமன்ற நீதிபதி உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
அரச உத்தியோகஸ்தர்கள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் சிறந்த சேவையாற்ற வேண்டும். நீதித்துறை தலையீடுகள் இன்றி சுதந்திரமாக செயற்பட வேண்டும். அதற்கு நீதிமன்ற உத்தியோகஸ்தர்கள் சிறந்த முறையில் கடமையாற்ற வேண்டும் எனவும் நீதிமன்றுக்கு வரும் மக்கள் சலிப்படையாதவாறு அவர்கள் கடமையாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் , மாவட்ட நீதிபதி கஜநிதிபாலன் , நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதிஸ்தரன் மற்றும் நீதிமன்ற அரச உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.