148
இந்தியாவின் திரிபுராவில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திரிபுராவின் அம்பாசா மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியிருந்தது. இதன் தாக்கம் அயல் மாநிலங்களான அஸாம் மற்றும் சிலிகுரியிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாசா பிராந்தியத்தில் இருந்து வடகிழக்கில் 19 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் மையம்கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Spread the love