270
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அந்த நாட்டு காவல்துறையினர் நேற்றையதினம் விசாரணை நடத்தியுள்ளனர். பெஞ்சமின் நெதன்யாகு தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாட்டவர்களிடமிருந்து சட்ட விரோதமாக நன்கொடைகளைப் பெற்றதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நெதன்யாகு மற்றும் அவரது மகனுக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கியதாக உலக யூத சங்கத்தின் தலைவர் ரொனால்ட் அண்மையில் தெரிவித்ததனை அடிப்படையாக வைத்தே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Spread the love