441
கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் ஆரம்ப நாளில் உணவு இடைவேளைக்கு முன்பே சதமடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை அவுஸ்திரேலியாவின் ஆரம்ப ஆட்டக்காரர் டேவிட் வார்னர் படைத்துள்ளார்.
இன்றையதினம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின் போது, இடது கை ஆரம்ப ஆட்டக்காரரான வார்னர் 78 பந்துகளில் சதமடித்து இந்த சாதனையை எடுத்துள்ளார்.
இது வரை, விக்டர் டிரம்பர், சார்லஸ் மெக்கார்டினி, டான் பிராட்மேன் மற்றும் மஜித் கான் ஆகியோர் மட்டுமே எடுத்துள்ள இந்த அரிய சாதனையை இன்று டேவிட் வார்னிங் சமன் செய்துள்ளார்.
Spread the love