அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி, அதன் முதற்கட்டமாக இன்றையதினம் கொழும்பில் அது தொடர்பான தெளிவுபடுத்தல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கப்படவுள்ளதாக கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் நாளைதினம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிராக் அம்பாந்தோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதனையடுத்து எதிர்வரும் 17ஆம் திகதி திருகோணமழைலயிலும் கொழும்பிலும் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் நாட்டை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கி, கடன் சுமையை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அநுரகுமார திஸாநாயக்க,இவை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தி, உரிமைகளுக்கான மக்கள் போராட்ட வருடமாக இவ்வருடத்தை மாற்றியமைக்கவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.