171
இந்திய அணியின் இருபதுக்கு இருபது மற்றும் ஒரு நாள் போட்டி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மகேந்திர சிங் டோணி அறிவித்துள்ளார். தலைவர் பொறுப்பில் இருந்து விலகினாலும் அணியில் தொடர்ந்து நீடிப்பார் எனவும்; இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டியில் டோணி இடம்பெறுவார் எனவும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
டோணி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love