171
மியான்மார் ராணுவம் பாலியல் வல்லுறவு, கொலை, சித்ரவதை மற்றும் தீவைப்பு ஆகிய குற்றங்களை இழைத்ததாக ரொஹிங்கா மக்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் மியான்மாரில் இனப்படுகொலை எதுவும் நடைபெறவில்லை எனவும்இந்த ஆணையம் தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக மியான்மார் ராணுவம் பாலியல் வல்லுறவு, கொலை, சித்ரவதை மற்றும் தீவைப்பு ஆகிய குற்றங்களை இழைத்ததாக ரொஹிங்கா மக்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன் மியன்மாரை விட்டும் வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love