164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குருணாகல் குளியாபிட்டியில் வொக்ஸ்வோகன் தொழிற்சாலை அமைக்கப்படுமா என்பதில் சந்தேகம் நிலவி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வொக்ஸ்வோகன் வாகனங்ககளை பொருத்தும் பாரிய தொழிற்சாலை ஒன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இலங்கையில் நிர்மானிக்கப்பட உள்ள தொழிற்சாலையானது வொக்ஸ்வோகன் நிறுவன வாகனங்களை பொருத்தும் நோக்கில் உருவாக்கப்படாது எனவும் தரம் குறைந்த வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக இந்த தொழிற்சாலை உருவாக்கப்படுகின்றது எனவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
Spread the love