குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வில்பத்து பிரச்சினையின் பின்னணியில் அரசியல் மறைகரமொன்று செயற்பட்டு வருவதாக ஒரு தொகுதி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளனர்.
அண்மைய வில்பத்து பிரச்சினையின் பின்னணில் அரசியல் நோக்கங்கள் காணப்படுவதாகவும் மூன்று தசாப்த காலமாக நீடித்து வந்த யுத்தத்தின் போது முஸ்லிம் சமூகம் அரசாங்கத்தின் பக்கத்தில் நின்றிருந்தது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர்களான ஹிஸ்புல்லாஹ், ரிசாட் பதியூதீன், ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசீ, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டவர்கள் இந்த ஊடகவயிலாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.