குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கலப்பு நீதிமன்றம் குறித்த யோசனை வரவேற்கப்பட வேண்டியது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். நல்லிணக்கப்பொறிமுறைமை குறித்த விசேட செயலணியினால் கலப்பு நீதிமன்றம் குறித்த யோசனை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதவான்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறையின் அடிப்படையில் நீதி விசாரணைப் பொறிமுறைமை அமைய வேண்டுமெனவும், நீதவான் குழாமில் ஒருவரேனும் வெளிநாட்டு நீதவானாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நீதி விசாரணைப் பொறிமுறையில் கலப்பு நீதிமன்ற அமைப்பு அவசியமானது என்பதே தமது திடமான நிலைப்பாடு என அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். டுவிட்டர் கணக்கில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.