வேகப்பந்து வீச்சாளர் கைல் அபாட் தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து கவுண்டி ஹாம்ப்ஷயர் அணிக்கு விளையாட முடிவெடுத்துள்ளதனாலேயே அவர் தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து விலகியுள்ளார்.
கைல் அபாட்டுடன் இது குறித்து கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா வாரியம் மேற்கொண்ட பேச்சு வார்த்தை முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து விளையாடுமாறும் தென் ஆப்பிரிக்காவை விட்டுச் செல்ல வேண்டாம் என தென்னரிபிரிக்க கிரிக்கெட் வாரியத்தினால் விடுத்த கோரிக்கையை அப்பாட் நிராகரித்துள்ளமையினால் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடனான கைல் அபாட்டின் ஒப்பந்தம் உடனடியாக முடிவுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.