குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை என்றாலும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றே வருகின்றது என இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்திருந்தார்.
மத்திய வங்கியின் ஆளுனரிடமிருந்து இவ்வாறான ஒர் கருத்தை எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ள நிதி அமைச்சர் அரசாங்கத்தினால் முன் வைக்கப்படும் பொருளாதார கொள்கைகளை அமுல்படுத்துவதே மத்திய வங்கியின் கடப்பாடு என சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய வங்கி ஆளுனரின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.