குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப்பின் மெக்ஸிக்கோ பயணம் காரணமாக பதவியிழக்க நேரிட்ட அந்நாட்டு அரசியல்வாதி ஒருவருக்கு மீளவும் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ட்ராம்பின் மெக்ஸிக்கோ விஜயத்திற்கு அப்போது ஒத்துழைப்பு வழங்கிய அப்போதைய நிதி அமைச்சர் லூயிஸ் விடேகரேக்கே ( Luis Videgaray ) இவ்வாறு உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ட்ராம்பிற்கு உதவியமைக்காக அப்போது நிதி அமைச்சராக கடமையாற்றிய லூயிஸ் விடேகரேயை மெக்ஸிக்கோ ஜனாதிபதி பணி நீக்கம் செய்திருந்தார். எனினும் தற்போது மெக்ஸிக்கோ ஜனாதிபதி, அவரை வெளிவிவகார அமைச்சராக நியமித்துள்ளார்.