131
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் மெட் ரென்சேவ் ( Matt Renshaw) உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். இரண்டு தடவைகள் பந்து தலையில் பட்ட காரணத்தினால் ரென்சேவ் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உபாதை காரணமாக சிட்னியில் தற்பொழுது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்தும் ரென்சேவ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. துடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு தடவையும் பின்னர் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது மற்றுமொரு தடவையும் ரென்சேவின் தலையில் பந்து பட்டது. இதனால் ரென்சேவிற்கு தலை வலி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love