குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கு விரைவில் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை கிடைக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த வாரமளவில் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை வழங்கும் என கண்டியில் பாலமொன்றை திறந்து வைத்து உரையாற்றிய போது அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரமளவில் இந்த வரிச் சலுகைத் திட்டம் மீளவும் இலங்கைக்கு கிடைக்கும் என்ற தகவல் தமக்கு கிடைத்துள்ளதாகவும் இந்த சலுகைத் திட்டம் கிடைக்கப் பெற்றால் மீளவும் நாட்டின் ஏற்றுமதி மற்றும் கைத்தொழில் துறையை மேம்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களைப் போன்று அல்லாது தற்போதைய அரசாங்கம் வெளிநாடுகளுடன் சிறந்த உறவைப் பேணி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இலங்கையின் மனிதாபிமான நிலைமைகளை காரணம் காட்டி ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.