குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் மாவீரா்களின் உறவினா்கள், முன்னாள் போராளிகளால் பொது நினைவுச் சமாதி அமைக்கு பணிகள் நேற்று வியாழக்கிழைமை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது கரைச்சி பிரதேச சபையின் அனுமதியின்றி பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அதனை தடுக்க மாவீரா் துயிலுமில்லத்திற்கு பிரதேச சபையின் வாகனத்தில் கடமை நேரத்தில் சென்ற கரைச்சி பிரதேச சபையின் செயலாளா் க.கம்சநாதன் தன்னுடன் பாராளுமன்ற உறுப்பினா் ஒருவரின் புகைப்படப்பிடிப்பாளரையும் அழைத்துச் சென்றுள்ளார்.
இது இன்று நீதிமன்றின் கவனத்திற்கு பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணியில் ஈடுப்பட்டவா்களின் சட்டத்தரணிகளால் கொண்டுவரப்பட்டது. இதன் போது கரைச்சி பிரதேச சபையின் செயலாளா் மன்றில் சமூகமளித்திருக்காமையினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பின்னா் சற்று நேரத்தில் மன்றில் முன்னிலையான கரைச்சி பிரதேச சபையின் செயலாளாரிடம் மன்றில் நீதவான் அரசியல்வாதி ஒருவரின் ஊடகவியலாளரை அழைத்துச் சென்றீர்களா வினவிய போது தான் போகும்போது வழியில் அவா் மறித்து எறியதாகவும் அது தவறு எனவும் பிரதேச சபை செயலாளா் தெரிவித்தாா்.
இதனையடுத்து கடமை நேரத்தில் அரசியல்வாதி ஒருவரின் தனிப்பட்ட ஊடகவியலாளரை அழைத்துச் சென்றமை நீதிமன்றம் கண்டித்ததோடு எச்சரிக்கையும் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.