குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டையில் போராட்டங்கள் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குதல் ஆகியனவற்றுக்கு எதிராக போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முன்னாள் சபாநாயகர் சமால் ராஜபக்ஸ தலைமையில் நாளை போராட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தநிலையிலேயே ஹம்பாந்தோட்டையில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவதற்கு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது. ஹம்பாந்தோட்டை காவல்துறையினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய விதிக்கப்பட்டுள்ள இந்த தடையானது 14 நாட்கள் அமுல்படுத்தப்படும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், இது குறித்து 26 பேருக்கு தனிப்பட்ட ரீதியில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது