Home இலங்கை51 இந்திய மீனவர்கள் விடுதலை

51 இந்திய மீனவர்கள் விடுதலை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 51 இந்திய மீனவர்கள் இன்றைய  தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வார ஆரம்பத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 39 மீனவர்கள் யாழ்ப்பாண நீதிமன்றிலும், 12 மீனவர்கள் வவுனியா நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகராலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More