குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எப்.எம். வானொலிச் சேவைகளை மூடுவதற்கு நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி பண்பலையில் இயங்கும் வானொலிச் சேவைகள் மூடப்படும் முதல் நாடாக நோர்வே வரலாற்றில் இடம்பிடிக்க உள்ளது.
டிஜிட்டல் யுகத்தின் மாற்றத்திற்கு அமைய இவ்வாறு பண்பலை வானொலிச் சேவைகள் மூடப்படுகின்றன. அடுத்த வாரம் முதல் நோர்வேயில் இயங்கி வரும் பண்பலை வானொலிச் சேவைகள் மூடப்பட்டு, டிஜிட்டல் வானொலிச் சேவைகள் இயங்கத் தொடங்க உள்ளன. இந்த விடயம் குறித்து உலகின் ஏனைய நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம் பண்பலை வானொலிச் சேவைகளை மூடுவதில் அவசரம் காண்பித்து வருவதாக விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு பண்பலை வானொலிச் சேவைகளை மூடுவதனால் அவசர தகவல்களை பரிமாற்றத்திற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடலாம் என தெரிவிக்கப்படுகிறது.
பண்பலை வானொலிச் சேவைகள் மூடப்படுவதனை நோர்வேயின் 66 வீதமான மக்கள் விரும்பவில்லை என அண்மைய கருத்துக் கணிப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எவ்வாறெனினும், பண்பலை வானொலிச் சேவைகளை மூடுவதற்கு அந்நாட்டு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.