பிரதமர் மோடியால் இந்தியாவை வழிநடத்த முடியாது. அதற்கான முயற்சியில் அவர் தோற்றுவிட்டார் எனவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அல்லது பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போன்றோரை பிரதமராக வரவேண்டுமென மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மோடி நாடு முழுவதையும் பெரும் பொருளாதார தேக்கநிலைக்குட்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மமதா , குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்படி தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டியது கட்டாயம் என்றும் குறிப்பிட்டுள்ள மம்தா பானர்ஜி, அவரால் இந்தியாவை வழிநடத்த முடியாது எனவும் அதற்கான முயற்சியில் தோற்றுவிட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.