165
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் பாரம்பரியம், சம்பிரதாயம் ஆகியவற்றை யாரும் மீற அனுமதிக்க முடியாது எனவும்; தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சரிமலை ஐய்யப்பன் கோயிலுக்குள் 100 பெண்களுடன் நுழையப்போவதாக பூமாதா படை என்ற அமைப்பின் தலைவர் திருப்தி தேசாய் சமீபத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love