137
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பிரித்தானியாவிற்கு பயணம் செய்ய உள்ளார். எதிர்வரும் 9ம் திகதி முதல் 14ம் திகதி வரையில் மங்கள பிரித்தானியாவில் தங்கியிருப்பார். பிரித்தானியா பிரதமராக திரேசா மே பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இலங்கை உயர்மட்டப் பிரதிநிதியொருவர் முதல் தடவையாக பிரித்தானியாவிற்கு பயணம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களை இலங்கை வெளிவிவகார அமைச்சர் சந்திக்க உள்ளார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
Spread the love