குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கலப்பு நீதிமன்ற பொறிமுறைமைக்கு பாதுகாப்பு தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கொழும்பு வார இறுதி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் சர்வதேச நீதிவான்களை உள்டக்கிய கலப்பு நீதிமன்றமொன்று உருவாக்கப்படுவதனை விரும்பவில்லை என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச தலையீட்டை கடுமையாக எதிர்ப்பதாக அனைத்து பாதுகாப்பு தரப்பினரும் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. நல்லிணக்க பொறிமுறைமை குறித்த விசேட செயலணி அண்மையில் கலப்பு நீதிமன்றம் குறித்து பரிந்துரை செய்திருந்தது. எனினும், இந்த யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த அனைத்து தரப்புக்களும் தெரிவித்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளின் பலவே நல்லிணக்க செயலணியினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.