குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படுவதனை சுதந்திரக் கட்சி விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றின் போது இந்த விடயங்கள் பற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது. உத்தேச புதிய அரசியல் சாசனம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.
13ம் திருத்தச் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் எனவும், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடிய வகையிலான அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு இணங்கப் போவதில்லை எனவும் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்,