137
கடந்த ஒரு வாரமாக தாய்லாந்தின் தென்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆயிரக் கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீதிகள் ஆறுபோல் காணப்படுவதாகவும் பல இடங்களில் புகையிரத பாதைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் இதனால் 8 மாகாணங்களில் நிலைமை மோசமாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Spread the love