Home உலகம்தாய்லாந்தில் வெள்ளப் பெருக்கு காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர்

தாய்லாந்தில் வெள்ளப் பெருக்கு காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர்

by admin

கடந்த ஒரு வாரமாக தாய்லாந்தின் தென்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக  ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு  காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆயிரக் கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீதிகள்  ஆறுபோல் காணப்படுவதாகவும் பல இடங்களில் புகையிரத பாதைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் இதனால் 8 மாகாணங்களில் நிலைமை மோசமாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More