புதிய அரசியல் சாசனம் குறித்த இணைக் குழுக்களின் பரிந்துரைகள் சாதகமானவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது. அரசியல் சாசனம் தொடர்பில் யோசனைகளை முன்வைக்கும் நோக்கில் ஆறு துணை குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த துணைகுழுக்களின் பரிந்துரைகள் சாதகமான வகையில் அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.அரசியல் சாசனம் தொடர்பிலான செயற்குழுவின் இடைக்கால பரிந்துரைகளுக்காக காத்திருப்பதாகவும், அரசியல் சாசனம் அமைக்கும் பணிகள் தாமதமின்றி முன்னெடுக்கப்படும் எனவும்நம்பிக்கை வெளியிட்ட அவர், பரிந்துரைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.