ஹம்பாந்தோட்டை உடன்படிக்கை கைச்சாத்திடப்படாவிட்டால் மக்கள் மீது கூடுதல் வரியை விதிக்க நேரிடும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு விடுதல் தொடர்பில் சீன நிறுவனங்களுடன் உடன்படிக்கை கைச்சாத்திடாவிட்டால் கூடுதல் வரிகளை விதிக்க நேரிடும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது, 1.2 பில்லியன் டொலர் சீன முதலீடு மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை கைத்தொழில் பேட்டை குறித்த முதலீடுகள் அவசியமானவை எனவும் அவ்வாறு முதலீடு செய்யாவிட்டால், மக்கள் மீது வரி அதிகளவில் அறவீடு செய்வதனை தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.