Home இலங்கைநாமல் உள்ளிட்ட 26 பேர் கைது செய்யப்படக்கூடிய அபாயத்தில்?

நாமல் உள்ளிட்ட 26 பேர் கைது செய்யப்படக்கூடிய அபாயத்தில்?

by admin


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 26 பேர் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவினை மீறி, போராட்டத்தில் ஈடுபட்டதாக நாமல் ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 7ம் திகதி ஹம்பாந்தோட்டை கைத்தொழில் முதலீட்டு வலயம் குறித்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற தரப்பினருக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஹம்பாந்தோட்டையின் பல பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 26 பேரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீதிமன்றின் உத்தரவினை மீறி பிரதேசத்தில் மக்கள் அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் போராட்டம் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More